விஷ்ணு விஷாலின் அடுத்த பட டைட்டில் வீடியோ ரிலீஸ்!
‘மோகன்தாஸ்’ என்ற டைட்டிலுடன் வெளியாகியிருக்கும் வீடியோவில் இந்தப் படம் முழுக்க த்ரில்லர் பாணியில் உருவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
- News18 Tamil
- Last Updated: April 11, 2020, 8:12 PM IST
விஷ்ணு விஷாலின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பை வீடியோவாக வெளியிட்டுள்ளது படக்குழு.
பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ராணா டக்குபதி நடித்துள்ள காடன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
காடன் தவிர எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள ஜகஜால கில்லாடி திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. இதைத்தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் எஃப்.ஐ.ஆர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேலைகளும் ஊரடங்கு முடிந்த பின்னர் தொடங்கி நடைபெற உள்ளது. எஃப்.ஐ.ஆர் படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தின் டைட்டிலை நடிகர் விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார். அதன்படி இத்திரைப்படத்துக்கு மோகன்தாஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ‘களவு’ திரைப்படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்கும் இத்திரைப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்துக்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார்.
கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் சூழலில் இந்தப் படத்தின் டைட்டிலை அறிவிக்கலாமா என்று ரசிகர்களிடம் கருத்துக் கேட்டிருந்தார் விஷ்ணு விஷால். ரசிகர்கள் சம்மதம் தெரிவித்ததை அடுத்து இன்று படத்தின் டைட்டிலை விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார்.
‘மோகன்தாஸ்’ என்ற டைட்டிலுடன் வெளியாகியிருக்கும் வீடியோவில் இந்தப் படம் முழுக்க த்ரில்லர் பாணியில் உருவாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ராணா டக்குபதி நடித்துள்ள காடன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
காடன் தவிர எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள ஜகஜால கில்லாடி திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. இதைத்தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் எஃப்.ஐ.ஆர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேலைகளும் ஊரடங்கு முடிந்த பின்னர் தொடங்கி நடைபெற உள்ளது.