தமிழன் என்று சொல்லடா... 'பூமி' படப்பாடல் ரிலீஸ்

Youtube Video

‘தமிழன் என்று சொல்லடா’ என்று தொடங்கும் இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

 • Share this:
  ‘பூமி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘தமிழன் என்று சொல்லடா’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

  ரோமியா ஜூலியட், போகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘பூமி’. ஜெயம் ரவியின் 25-வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். மே 1-ம் தேதி வெளியாக இருந்த இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போனது.

  இந்நிலையில் ஜெயம் ரவியின் பிறந்தநாளான இன்று படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘தமிழன் என்று சொல்லடா’ என்று தொடங்கும் இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். அனிருத், லாவண்யா, இமான் ஆகியோர் பாடியுள்ளனர். இந்தப் பாடல் ஜெயம் ரவியின் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக அமைந்திருக்கிறது.  சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து மே மாதமே திரைக்கு வந்திருக்க வேண்டிய ஜெயம் ரவியின் ‘பூமி’ படமும் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என செய்திகள் வெளிவந்தன. ஆனால் இத்தகவலை படத்தின் இயக்குநர் லக்‌ஷ்மண் மறுத்துள்ளார். மேலும் ‘பூமி’ படத்தின் படப்பிடிப்பை முடிக்க இன்னும் 5 நாட்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
  Published by:Sheik Hanifah
  First published: