டிக் டாக் உள்ளிட்ட 59 சீனச் செயலிகளுக்கு தடை - நடிகை சாக்‌ஷி அகர்வால் ரியாக்‌ஷன்

நடிகை சாக்‌ஷி அகர்வால்

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனச் செயலிகளுக்குத் தடை விதித்ததற்காக நடிகை சாக்‌ஷி அகர்வால் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

 • Share this:
  இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மொபைல் மற்றும் இதர மின்னணு கருவிகளில் பயன்படுத்தக்கூடிய 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

  தடை செய்யப்பட்டுள்ள செயலிகளில் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும், டிக் டாக், ஷேர் இட், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட செயலிகள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

  இந்நிலையில் சீன நிறுவனங்களின் தொழில் உரிமைகளைக் காக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு என்று இந்த விவகாரத்தில் சீன வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பலரும் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், நடிகை சாக்‌ஷி அகர்வால் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

  மேலும் இது இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் முக்கிய முடிவு என்றும், இந்த முடிவு இந்தியாவின் சுயசார்பு திறனை மேம்படுத்தும் என்று கூறியுள்ளார்.

  மேலும் படிக்க: நான் மட்டும் தான் குடிச்சேன்... பீட்டர் குடிக்கல - வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட வனிதா விஜயகுமார்

  முன்னதாக நடிகை சாக்‌ஷி அகர்வால், தன்னை டிக்டாக்லிருந்து விலக்கி கொண்டு சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தார்.
  Published by:Sheik Hanifah
  First published: