இயக்குநர் மணிரத்னத்திடம் நீங்களும் கேள்வி கேட்கலாம் - மொபைல் நம்பர் கொடுத்த சுஹாசினி
மௌனராகம், நாயகன், தளபதி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ள இவர் தற்போது தனது கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார்.

இயக்குநர் மணிரத்னம்
- News18 Tamil
- Last Updated: April 13, 2020, 10:28 PM IST
இயக்குநர் மணிரத்னத்திடம் கேள்வி கேட்க விரும்புபவர்கள் வீடியோ அனுப்புமாறு நடிகை சுஹாசினி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தனது படைப்புகளால் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் இடம்பிடித்திருப்பவர் மணிரத்னம். மௌனராகம், நாயகன், தளபதி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ள இவர் தற்போது தனது கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்டோர் நடிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குநர் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “4 தசாப்தங்களாக அவரது படத்தை நீங்கள் பார்த்து வருகிறீர்கள். இப்போது அவர் உங்களைப் பார்க்கும் நேரம். உங்களைப் பற்றிய அறிமுகத்தோடு உங்கள் கேள்வியை 25 வினாடிகளுக்குள் வீடியோ எடுத்து அதை 90946 77777 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். உங்கள் வீடியோக்களைப் பார்த்து இயக்குநர் மணிரத்னம் பதிலளிப்பார்”.என்று தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானை என்ற ஆஸ்கர் நாயகனை அறிமுகப்படுத்தியது தொடங்கி, ரஜினிகாந்த், கமல், சிம்பு, விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கிய முன்னணி இயக்குநரிடம் என்னென்ன கேள்விகள் கேட்கப்படும். அதற்கு அவர் கொடுக்கும் பதில்கள் என்ன என்பதை வரும் நாட்களில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: கொரோனா எதிரொலி : மகனை நினைத்து மனவருத்தத்தில் விஜய்?
தனது படைப்புகளால் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் இடம்பிடித்திருப்பவர் மணிரத்னம். மௌனராகம், நாயகன், தளபதி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ள இவர் தற்போது தனது கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்டோர் நடிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குநர் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “4 தசாப்தங்களாக அவரது படத்தை நீங்கள் பார்த்து வருகிறீர்கள். இப்போது அவர் உங்களைப் பார்க்கும் நேரம். உங்களைப் பற்றிய அறிமுகத்தோடு உங்கள் கேள்வியை 25 வினாடிகளுக்குள் வீடியோ எடுத்து அதை 90946 77777 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள். உங்கள் வீடியோக்களைப் பார்த்து இயக்குநர் மணிரத்னம் பதிலளிப்பார்”.என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: கொரோனா எதிரொலி : மகனை நினைத்து மனவருத்தத்தில் விஜய்?