Home » News » Entertainment » DIRECTOR ATLEE NEXT MOVIE ANNOUNCEMENT MSB

புதிய அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர் அட்லீ!

ராஜா ராணி படத்தைத் தொடர்ந்து விஜய்க்கு 3 படங்கள் இயக்கிய அட்லீ தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

புதிய அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர் அட்லீ!
இயக்குநர் அட்லீ
  • Share this:
தான் தயாரிக்க இருக்கும் படம் குறித்த புதிய அறிவிப்பை இயக்குநர் அட்லீ வெளியிட்டுள்ளார்.

அட்லீ இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் பிகில். விஜய், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை அடுத்து ஷாரூக்கான் நடிக்கும் புதிய படத்தை அட்லீ இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுகுறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அவர் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.


இந்நிலையில் ஏ ஃபார் ஆப்பிள் என்ற தனது தயாரிப்பு நிறுவனம் அடுத்ததாக தயாரிக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பை நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அட்லீ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ராஜா ராணி படத்தைத் தொடர்ந்து விஜய்க்கு 3 படங்கள் இயக்கிய அட்லீ தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அவர் தயாரித்த முதல் படமான  ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற திரைப்படத்தில் நடிகர் ஜீவா நடித்திருந்தார். இந்நிலையில் இரண்டாவது பட அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. அதனுடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் படிக்க: லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் குறித்த அப்டேட்!
First published: April 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading