புதிய போஸ்டர் உடன் அசத்தல் அப்டேட் கொடுத்த ‘ஜகமே தந்திரம்’ டீம்

ஜகமே தந்திரம்

தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் முதல்பாடல் ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

  • Share this:
    பேட்ட படத்தை அடுத்து தனுஷின் 40-வது படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லண்டனில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி மாதத்திலேயே படப்பிடிப்பு முடிவடைந்து மோஷன் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டிருந்தது. அதில் மே 1-ம் தேதி ஜகமே தந்திரம் திரைப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது.

    இந்நிலையில் தனுஷின் பிறந்தநாள் இந்த மாதத்தில் வருகிறது என்பதால் இன்று படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜூலை 28-ம் தேதி தனுஷின் பிறந்தநாளன்று ரகிட என்ற பாடல் வெளியாகும் என்ற அறிவிப்புடன் புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



    ஏற்கெனவே வெளியான ஜகமே தந்திரம் படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
    Published by:Sheik Hanifah
    First published: