ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்ட விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்

இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சி தனது ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்டிருக்கிறார்.

 • Share this:
  1981-ம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் தனக்கென தமிழ் சினிமாவில் தனி பாதை அமைத்துக் கொண்டவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் இவர் நடிகராகவும் நடித்து வருகிறார்.

  1945-ம் ஆண்டு பிறந்த இவருக்கு வரும் ஜூலை மாதம் 2-ம் தேதி 74-வது பிறந்தநாள். கொரோனா அச்சுறுத்தலால் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல யாரும் வர வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்டு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

  அந்த வீடியோவில், “பாசமான பிள்ளைகளுக்கு என் அன்பான வேண்டுகோள். ஒவ்வொரு வருடமும் என்னுடைய பிறந்தநாளன்று வந்து வாழ்த்திவிட்டு சந்தோஷமாக செல்வீர்கள். ஆனால் இந்த வருடம் கண்ணுக்குத் தெரியாத ஒரு விரோதி (வைரஸ்) உலகத்தையே தலைகீழாக திருப்பி போட்டுக் கொண்டிருக்கிறது.

  யாரும் இப்போது உண்மையான சந்தோஷத்தில் இல்லை. பயம் கலந்த நிலையிலேயே இருந்து வருகிறோம். ஆகவே உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். யாருமே இந்த வருடம் நேரில் வர வேண்டாம். ஏனென்றால் உங்களது குடும்பத்தாருக்கு நீங்கள் முக்கியம். உங்களுக்கு குடும்பம் முக்கியம். மிகவும் ஜாக்கிரதையாக கவனமாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.

  மேலும் படிக்க: நான் மட்டும் தான் குடிச்சேன்... பீட்டர் குடிக்கல - வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட வனிதா விஜயகுமார்

  முன்னதாக ஜூன் 22-ம் தேதி பிறந்தநாள் கண்ட நடிகர் விஜய்யும் இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
  Published by:Sheik Hanifah
  First published: