விஜய் டிவி ‘கலக்கப்போவது யாரு’ புகழ் யோகிக்கு காதல் திருமணம்

ஊரடங்கின் போது கலக்கப்போவது யாரு புகழ் யோகிக்கு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது.

விஜய் டிவி ‘கலக்கப்போவது யாரு’ புகழ் யோகிக்கு காதல் திருமணம்
விஜய் டிவி யோகி
  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் பிரபலமானவர் யோகி. இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி தோழியான சவுந்தர்யாவை கடந்த 24-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். சவுந்தர்யா சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிகிறார்.

திருமணம் குறித்து இணைய ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் யோகி, சவுந்தர்யாவும் தானும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஒன்றாக படித்ததாகவும், 2 ஆண்டுகளுக்கு முன்னர் தாங்கள் படித்த பள்ளியில் பழைய மாணவர்களின் சந்திப்பு நடந்தபோது தனக்கு சவுந்தர்யா மீது காதல் வயப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அப்போது தனது காதலைச் சொல்ல தயங்கியதாகவும், காரணம் அப்போது தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டத் தொடங்கியிருந்த நேரம் என்றும் கூறியுள்ளார்.

தற்போது கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு நடிகர்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலையில் தனது காதலை சவுந்தர்யாவிடம் தெரிவித்து இருவீட்டார் சம்மதத்துடன் யோகி - சவுந்தர்யா ஜோடிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.


மேலும் படிக்க: லாக்டவுனில் நடந்த சன் டிவி சீரியல் நடிகரின் திருமணம் - புகைப்படங்கள்

கொரோனா பிரச்னை முடிவடைந்த பின்னர் தனது தொலைக்காட்சி நண்பர்களுக்கு வரவேற்பு ஏற்பாடு செய்து விருந்தளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் யோகி தெரிவித்துள்ளார்.
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading