உணர்வுகளை புரிந்து கொண்டால் விஜய் சேதுபதியின் எதிர்காலத்திற்கு நல்லது - அமைச்சர் கடம்பூர் ராஜூ

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ‘800’ படத்தில் நடிப்பது பற்றி நடிகர் விஜய் சேதுபதி யோசித்து பார்க்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உணர்வுகளை புரிந்து கொண்டால் விஜய் சேதுபதியின் எதிர்காலத்திற்கு நல்லது - அமைச்சர் கடம்பூர் ராஜூ
விஜய் சேதுபதி | அமைச்சர் கடம்பூர் ராஜூ
  • Share this:
‘800’ திரைப்படத்தில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் உணர்வுகளை புரிந்துகொண்டால் அவரின் எதிர்காலத்துக்கு நல்லது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி‌‌ அருகே உள்ள கழுகாசலபுரத்தில் ரூ.25லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு அணை பணிகள் தொடக்க விழா மற்றும் பரசுராமபுரம், கார்த்திகை பட்டி, குமாரபுரம் பகுதியில் அம்மா நகரும் நியாய விலைக்கடை தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ‘800’ படத்தில் நடிப்பது பற்றி நடிகர் விஜய் சேதுபதி யோசித்து பார்க்க வேண்டும். ஒட்டுமொத்த உணர்வளர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டிய இடத்தில் நடிகர் விஜய் சேதுபதி உள்ளார். திரைப்படத்தில் நடிப்பது தனிப்பட்ட உரிமை என்றாலும் உணர்வுகளை புரிந்து கொள்வர் என்று நினைக்கிறேன்.புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொண்டு செயல்பட்டால் அவருடைய எதிர்காலத்திற்கு நல்லது.கேளிக்கை வரி குறைப்பு, சினிமா டிக்கெட் கட்டணம் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. திரைத்துரையினருக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி உள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளுடன் திரையரங்கு திறப்பு மற்றும் வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து விரைவில் ஆலோசனை நடத்த இருக்கிறோம். திரையரங்குகள் திறப்பு பற்றி ஒருவாரத்தில் நல்ல முடிவு வரும்”.என்றார்.

ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading