வனிதா திருமணத்துக்கு இன்ஸ்பெக்டரின் அலட்சியமே காரணம் - பீட்டர் பாலின் முதல் மனைவி காவல்துறை துணை ஆணையரிடம் பரபரப்பு புகார்

வேறு காவல் ஆய்வாளரை மாற்றி தனது வழக்கை விசாரிக்க வேண்டும் என்று பீட்டர் பாலின் மனைவி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு துணை ஆணையர் அலுவகத்தில் புகார் அளித்துள்ளார்.

வனிதா திருமணத்துக்கு இன்ஸ்பெக்டரின் அலட்சியமே காரணம் - பீட்டர் பாலின் முதல் மனைவி காவல்துறை துணை ஆணையரிடம் பரபரப்பு புகார்
புகைப்படம் (யூடியூப்) வனிதா விஜயகுமார்
  • Share this:
பிக்பாஸ் புகழ் நடிகை வனிதா விஜயகுமார் அண்மையில் பீட்டர் பால் என்பவரை தனது வீட்டில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். பீட்டரின் முதல் மனைவி தனக்கு முறையான விவாகரத்து அளிக்காமல் நடிகை வனிதாவை திருமணம் செய்ததாக பீட்டர் பால் மீது வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் பீட்டர் பாலை விசாரித்துள்ளார். அப்போது பீட்டர் பால் தனது முதல் மனைவியான எலிசபெத் என்பவரை முறையாக விவாகரத்து செய்துவிட்டுதான், வனிதா விஜயகுமாரை திருமணம் செய்ய இருப்பதாக எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். எனினும் அடுத்த சில நாட்களிலேயே அவ்வாறு எந்தவித முறையான விவாகரத்து அளிக்காமல் வனிதா விஜயகுமாரை திருமணம் செய்துள்ளார்.

மேலும் திருமணம் நடைபெறுவதற்கு ஒரு சில நாட்கள் முன்பு கூட காவல் ஆய்வாளரை தொடர்பு கொண்டு அவர்கள் திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள் என புகார் அளித்தும் அதை அலட்சியப்படுத்தியதால் தற்போது பீட்டர் பால் மற்றும் வனிதா இடையே திருமணம் நடந்து முடிந்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.


மேலும் படிக்க : விஷால் அலுவலகத்தில் ₹ 45 லட்சம் கையாடல் - பெண் கணக்காளர் மீது புகார்

காவல் ஆய்வாளரின் அலட்சியப் போக்கினால் தான் வனிதா - பீட்டர் பால் இருவருக்கும் திருமணம் நடந்ததாகவும் எனவே காவல் ஆய்வாளர் வனிதாவிற்கு சாதகமாக செயல்படுகிறார் என்கிற சந்தேகம் எழுந்துள்ளதால் அவரை மாற்றி இந்த வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading