சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ உருவானது இப்படித்தான் - மேக்கிங் வீடியோ

சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

  • Share this:
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி அக்டோபர் 30-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் இத்திரைப்படம் நேரடியாக ரிலீசாகிறது.

இந்நிலையில் ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தின் 2-வது மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், படத்தின் கதை எழுதப்பட்டது முதல் படப்பிடிப்பின் போது நடைபெற்ற பல்வேறு சுவாரஸ்ய விஷயங்களை சூர்யா, சுதா கொங்கரா உள்ளிட்ட படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
முன்னதாக கடந்த தமிழ்ப்புத்தாண்டு அன்று படக்குழு வெளியிட்டிருந்த முதல் மேக்கிங் வீடியோவில், 19 வயது கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யா கடினமாக உடற்பயிற்சி செய்தது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
First published: October 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading