‘லவ் யூ ஆல்’ என்று மருத்துவர்களிடம் எழுதிக் கொடுத்த எஸ்.பி.பி

எஸ்.பி.பாலசுப்ரமணியத்திடம் கொடுக்கப்பட்ட பேப்பரில் ‘லவ் யூ ஆல்’ என்று எழுதி அதை மருத்துவர்களிடம் கொடுத்துள்ளார்.

  • Share this:
கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆகஸ்ட் 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அன்று தொடங்கி பலரும் எஸ்.பி.பி. நலமுடம் மீண்டு வர பிரார்த்தனையில் ஈடுபட்டனர். திரையுலகினர் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களாகவே அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை நிர்வாகமும் எஸ்.பி.சரணும் தெரிவித்து வருகின்றனர்.


நேற்று தனது தந்தையின் உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்ட எஸ்.பி.சரண், “4-வது நாளாக அப்பாவின் உடல்நிலை சீராக இருக்கிறது. இந்த வார இறுதிக்குள் குட் நியூஸ் வரும் என எதிர்பார்க்கிறோம். வரும் திங்கள் கிழமைக்குள் கண்டிப்பாக ஒரு நல்ல முன்னேற்றம் இருக்கும் என நான் நம்புகிறேன். அதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு நுரையீரல் சிகிச்சை கொடுக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு கொடுக்கப்படும் மயக்க மருந்துகளை குறைத்ததால் அவருக்கு நினைவு திரும்பியுள்ளது.மேலும் அவருக்கு கை ,கால்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றது. அதில் அவரது விரல்களுக்கு பயிற்சி கொடுக்கவும், அவருக்கு வேண்டியதை கேட்கவும் எழுத பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. அவருக்கு கொடுத்த பேப்பரில் ‘லவ் யூ ஆல்’ என்று எழுதி மருத்துவர்களிடம் கொடுத்துள்ளார்.
First published: September 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading