மாநாடு படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்று யுவன், சிம்பு ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், முக்கிய அறிவிப்பை அதன் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் மாநாடு படத்தை தயாரித்துள்ளது. சிம்பு, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்பட ஏராளமானோர் இதில் நடித்துள்ளனர். கல்யாணி ப்ரியதர்ஷன் நாயகி. வெங்கட்பிரபு படத்தை இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
படத்தின் முதல் சிங்கிள் ரம்ஜான் பெருநாளில் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், வெங்கட் பிரபுவின் அம்மா காலமானதால் பாடல் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகி நாடு முழுவதும் மக்கள் வேதனையில் இருக்கும் காலத்தில், பாடலை வெளியிடுவது சரியில்லை என்று சுரேஷ் காமாட்சி பாடலை வெளியிடாமல் தள்ளிப் போட்டார். தற்போது, கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ரசிகர்கள் மீண்டும் பாடல் குறித்து கேட்க ஆரம்பித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதற்கு பதிலளித்திருப்பவர்,
மாநாடு படத்தின் இசை உரிமையை யுவனின் யு1 ரெக்கார்ட்ஸ் வாங்கியுள்ளது. முதல் சிங்கிள் எந்த தேதியில், எத்தனை மணிக்கு வெளியாகும் என்பதை புதன்கிழமை
லிட்டில் மேஸ்ட்ரோ அறிவிப்பார் என தெரிவித்துள்ளார்.
ஆக, நாளை, மாநாடு படத்தின்
முதல் சிங்கிள் எப்போது வெளியாகும் என்பது தெரியவரும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்