லொள்ளு சபா இயக்குநரின் ‘இடியட்’ ட்ரெய்லர் ரிலீஸ்

Youtube Video

ராம்பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள இடியட் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

  • Share this:
விஜய் டிவியின் ‘லொள்ளுசபா’ நிகழ்ச்சிக்குப் பின் தில்லுக்கு துட்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ராம்பாலா. முதல்பாகம் வெற்றியடையவே இரண்டாவது பாகமும் வெளியானது.

இந்த இரண்டு திரைப்படங்களும் வணிக ரீதியில் வெற்றி பெற்றதை அடுத்து ‘டாவு’ என்ற படத்தை ராம்பாலா இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் வடிவேலு - ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இத்திரைப்படம் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த எந்தத் தகவலும் இல்லை.

இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மிர்ச்சி, சிவா, நிக்கி கல்ராணி உள்ளிட்டோர் நடிப்பில் இடியட் என்ற படத்தை ராம்பாலா இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ராம்பாலாவின் முந்தைய படங்களைப் போலவே ஹாரர் காமெடி ஜானரில் இந்தப் படமும் உருவாகியுள்ளது.

ஹாரர், காமெடி கலந்து கலகலப்பான ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி ஆகியோர் பேய்களுடன் காமெடி செய்து கலக்கியுள்ளனர். விரைவில் இத்திரைப்படம் ரிலீசாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு விக்ரம் செல்வா இசையமைத்துள்ளார். ராஜாபட்டாச்சர்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: