பொங்கல் ரிலீசுக்கு தயாராகும் தமிழ்ப் படங்கள்... ‘மாஸ்டர்’ உடன் நேரடி மோதலா?

தமிழகத்தில் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் முன்னணி நடிகர்களின் படங்கள் 2021-ம் ஆண்டின் பொங்கல் விழாவைக் குறிவைத்துள்ளன.

பொங்கல் ரிலீசுக்கு தயாராகும் தமிழ்ப் படங்கள்... ‘மாஸ்டர்’ உடன் நேரடி மோதலா?
மாஸ்டர்
  • Share this:
கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து திரையரங்குகள் மூடப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அக்டோபர் 15-ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்ட போதும் தமிழகத்தில் இன்னும் திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை.

6 மாதத்துக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் அதை நம்பியிருப்போர் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்திருக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கு அரசு தரப்பில் விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த மாதம் வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக்கு சூரரைப்போற்று, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட சில பெரிய படங்கள் ஓடிடி தளத்தில் ரிலீசாகின்றன. இருப்பினும் அடுத்த மாதம் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் பழைய படி மக்கள் கூட்டம் வர சில நாட்களாவது எடுக்கும். எனவே விஜய்யின் மாஸ்டர், கார்த்தியின் சுல்தான் ஆகிய திரைப்படங்களை பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வர பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மேலும் படிக்க: பிரபல இளம் இயக்குநருக்கு திருமணம் - சிவகார்த்திகேயன், கார்த்தி வாழ்த்து

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதை உறுதி செய்துள்ளது படக்குழு.


கார்த்தியின் சுல்தான், சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட்டால் மாஸ்டர் உடன் நேரடியாக மோதும் சூழல் உருவாகும்.
First published: October 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading