விஜய் போல் குட்டிக் கதை சொன்ன ‘இரண்டாம் குத்து’ டீம் - டீசர் ரிலீஸ்

‘இரண்டாம் குத்து’ படத்தின் டீசரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார்.

  • Share this:
ஹர ஹர மஹாதேவகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சந்தோஷ்.பி ஜெயக்குமார். இதையடுத்து 2018-ம் ஆண்டு ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை இயக்கினார். அடல்ட் ஹாரர் காமெடி ஜானரில் வெளியான இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக், யாசிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

படத்தில் ஆபாச வசனங்கள் அதிகம் இருப்பதாகவும், திருநங்கைகளை கொச்சைப்படுத்தியிருப்பதாகவும் படம் வெளியான போது விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடித்திருக்கிறார் இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் தற்போது டீசரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். டீசரின் தொடக்கத்திலேயே விஜய்யைப் போல குட்டிக் கதை சொல்ல ஆரம்பிக்கிறார் மொட்டை ராஜேந்திரன். அதைக்கேட்கும் டேனியல் என்ன சாமி விஜய், விஜய் சேதுபதி எல்லாரும் குட்டிக் கதை சொல்றாங்க. நீங்களுமா எனக் கேட்கிறார்.


இது வேற குட்டிக் கதை என்று மொட்டை ராஜேந்திரன் ஆரம்பிக்க இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் காட்சிகள் உடன் டீசர் நீள்கிறது. கடைசியாக எங்களது கதையில் எப்போதும் மகிழ்ச்சியான முடிவாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளது படக்குழு.‘இரண்டாம் குத்து’ படத்துக்கு எஸ்.என்.பிரசாத் இசையமைக்க, ஜி.கே.பிரசன்னா எடிட் செய்துள்ளார். சந்தோஷ்.பி.ஜெயக்குமார் உடன் நகைச்சுவை நடிகர் டேனியல், மொட்டை ராஜேந்திரன், மீனள் ஷா, அக்ரித்தி சிங், ஷாலு ஷம்மு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். தணிக்கையில் ‘A' சான்றிதழ் பெற்றிருக்கும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கே ஒரு சிலர் முகம் சுளித்த நிலையில் டீசர் என்ன மாதிரி எதிர்வினையைப் பெறப்போகிறது என்று பொருத்திருந்து பார்க்கலாம்.
First published: October 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading