பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட ஏழு வயது புதுக்கோட்டை சிறுமி: கொதிக்கும் திரைபிரபலங்கள்..

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து திரை பிரபலங்கள் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட ஏழு வயது புதுக்கோட்டை சிறுமி: கொதிக்கும் திரைபிரபலங்கள்..
7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
  • Share this:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் மேலகுடியிருப்பு கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அறந்தாங்கி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து திரை பிரபலங்கள் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

நடிகை வரலட்சுமி : மீண்டும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நாம் எல்லோரும் கொரோனா வந்து சாவதில் தவறில்லை. கடவுளின் பார்வையில் நாம் அனைவருமே வாழத்தகுதியற்றவர்கள் என பதிவிட்டுள்ளார்.


 

அதுல்யா ரவி : இதயத்தில் வலியை கொடுக்கும் மற்றுமொரு சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்கிறவர்கள் மாறப்போவதில்லை. சமூக வலைத்தளத்தில் அழுவது தீர்வல்ல. இன்றைய தினம் இந்த நிகழ்வு நாளை வேறொரு குழந்தைக்கு இது போன்று நிகழலாம் என தமிழக முதல்வருக்கு டேக் செய்துள்ளார்.

 

சாய்பல்லவி : குழந்தைகளுக்கான பாதுகாப்பு நம் நாட்டில் சுத்தமாக இல்லை என காட்டமாக பதிவிட்டுள்ளார். ஹேஷ்டேக் மூலமாக நீதி காண வேண்டிய நிலையில் இருப்பதாகப் பதிவிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

ராதிகா சரத்குமார்: சிறுமிக்கு நடந்த கொடுமை பற்றி படிக்கும்போதே என் இதயம் நொறுங்குகிறது. கண்களில் கண்ணீர் சிந்தாமல் அதைப் பற்றி எழுதக்கூட வலிமை இல்லை, குற்றவாளிகளை விடக்கூடாது என பதிவிட்டுள்ளார்.

 

 

ஐஸ்வர்யா தத்தா:

அனைத்து மனிதர்களும் ஒன்றல்ல. சரி என்பது சரி. தவறு என்பது தவறு. 7 வயது பெண் குழந்தையை எப்படி பாலியல் பலாத்காரம் செய்ய முடியும்.. இதற்கு ஒரே ஒரு தண்டனை உடனே தூக்கிலிட வேண்டும். என் இதயம் நொறுங்கிவிட்டது. கடவுள் அந்த சிறுமியின் குடும்பத்திற்கு அதிக பலத்தை அளிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

 

 

 

சாக்ஷி அகர்வால்: எப்படி சிலர் மனிதத்தன்மையே இல்லாமல் இருக்கிறார்கள். சிறுமி கொலைக்கு நீதி வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

 

நடிகர் விஷ்ணுவிஷால் : எனது இதயம் நொறுங்கி விட்டது. இது மாற வேண்டும். ஒரு சமூகமாக நாம் தோற்றுவிட்டோம்.போதும் என பதிவிட்டுள்ளார்.

 

 

  

இது குறித்து ட்விட்டரில் பதிவிவிட்ட தமிழக முதல்வர், அறந்தாங்கி சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு காரணமான குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியை சட்டத்தின் முன்நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர துரித நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்.

சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading