பிக்பாஸ் தர்ஷனின் ‘தாய்க்குப்பின் தாரம்’ டீசர் ரிலீஸ் - வீடியோ

பிக்பாஸ் தர்ஷன் நடித்துள்ள மியூசிக் ஆல்பத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

  • Share this:
மாடலிங்க் துறையில் இருந்த தர்ஷன் பின்னர் விளம்பரப்படங்களில் நடித்து வந்தார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார் தர்ஷன். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதிவரை வந்த தர்ஷன் தான் வெற்றி பெறுவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் வெற்றி வாய்ப்பு கைமாறிப்போனது.

பிக்பாஸ் வீட்டில் தர்ஷனின் நடவடிக்கைகளைப் பார்த்து அவரை பிக்பாஸ் மேடையில் வைத்து புகழ்ந்து பேசிய நடிகர் கமல்ஹாசன், ராஜ்கமல் ஃபிலிஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நாயகனாக அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்தார். மேலும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்திலும் தர்ஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தர்ஷன் தற்போது ஒரு மியூசிக் ஆல்பத்தில் நடித்துள்ளார். ‘தாய்க்குப்பின் தாரம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த ஆல்பத்தை ப்ளேஸ் கண்ணன் எழுதி இயக்கியுள்ளார்.


இந்த ஆல்பத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக சீரியல் நடிகை ஆயிஷா நடித்துள்ளார். தரண் குமார் இசையில் சித் ஸ்ரீராம் குரலில் உருவாகியிருக்கும் இந்த ஆல்பத்தால் தனது கனவு நனவாகி இருப்பதாக தர்ஷன் தெரிவித்துள்ளார்.தற்போது இந்த ஆல்பத்தின் டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் மியூசிக் ஆல்பமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading