பாட்டு மேதை என்பதையும் தாண்டி மனிதநேயமிக்க கலைஞர் எஸ்.பி.பி...!

பாட்டு மேதை என்பதையும் தாண்டி மனிதநேயமிக்க கலைஞர் எஸ்.பி.பி...!
  • News18
  • Last Updated: September 26, 2020, 11:29 PM IST
  • Share this:
பாட்டு மேதை என்பதையும் தாண்டி மனிதநேயமிக்க கலைஞர் என்பதுதான் எஸ்.பி.பி-யின் தனி அடையாளம். பாடும் நிலா, பத்மபூஷன் என எஸ்.பி.பி-க்கு எத்தனையோ பெயர்கள் உண்டு. ஆனால் அதையெல்லாம் விஞ்சும் வகையில் உயர்ந்து நிற்கிறது அவரது மனிதநேய பண்பு.

ஒரு வெடி விபத்தில் பார்வையை இழந்த ரசிகர் ஒருவர் அந்த துயரத்தை கடக்க எஸ்.பி.பி-யின் பாடல்களையே மருந்தாக கொண்டுள்ளார். தன் வாழ்வை மீட்டெடுத்த எஸ்.பி.பி-யை ஒருமுறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்பதே தனது வாழ்நாள் கனவு என்றும் உருக்கத்துடன் கூறியிருந்தார்.

பார்வையற்ற தனது ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்ற நேரில் சென்ற எஸ்.பி.பி, அவருடன் இணைந்து பாடியும் அவருக்கு இன்ப அதிர்ச்சியளித்தார். இத்தனை ஆண்டுகளாக தன்னை மகிழ்வித்த அந்த குரலுக்கு சொந்தக்காரர் தற்போது தன் அருகாமையில் இருப்பதை உணர்ந்த அந்த ரசிகர் நெகிழ்ச்சியடைந்த தருணங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.
50 ஆண்டுகளில் இந்தியாவே அன்னாந்து பார்க்கும் ஒரு உயரத்துக்கு சென்று விட்டாலும் பழசை என்றும் மறக்காதவர் எஸ்.பி.பி. இதை பறைசாற்றும் விதமாக அண்மையில் தனது கல்லூரி நண்பர்களை சந்தித்த எஸ்.பி.பி, அவர்கள் விரும்பிய பாடல்களை பாடி அவர்களை மகிழ்வித்தது எல்லோரையும் உருக செய்தது.

ஒருமுறை எஸ்.பி.பி-க்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ஒரு வயதான மூதாட்டி வீல் சேரில் அமர்ந்தபடி அவரை வாழ்த்தி கௌரவித்திருக்கிறார். ரசிகையானாலும் அவர் முன்பு கைக்கட்டி அவர் வாழ்த்துக்களை எஸ்.பி.பி ஏற்றுக்கொண்ட விதம் பார்ப்பவர்களை பிரமிக்க வைத்தது.ஒருமுறை தன்னுடைய மேடை கச்சேரியில் புல்லாங்குழல் வாசிக்கும் நபர் அவருடைய குறிப்பை மறந்துவிட, பாடல் முடிந்ததும் அவருக்காக மீண்டும் அந்த பாடலை பாடியதோடு அவரை பாராட்டி பேசிய எஸ்.பி.பி ரசிகர்களிடம் அவருக்கு கைத்தட்டலையும் வாங்கி கொடுத்தார்.
இப்படி இசையோடு சேர்த்து அன்பையும் அள்ளிக் கொடுத்தவர் எஸ்.பி.பி. அதனால்தான் அவரது இழப்பு திரையுலகில் உள்ளவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் வேதனையடையச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
First published: September 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading