‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ டீஸரை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்

‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ திரைப்படத்தின் டீசரை நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • Last Updated: September 24, 2020, 8:21 PM IST
  • Share this:
இணைய உலகில் பல படைப்புகளை உருவாக்கியுள்ள ட்ரெண்ட் லவுட் நிறுவனம் முதல்முறையாக ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ படத்தைத் தயாரித்துள்ளது. ராஜா ராமமூர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷரா ஹாசன் நாயகியாக நடிக்கிறார். பிரபல பாடகி உஷா உதூப் அக்‌ஷரா ஹாசனின் பாட்டியாக நடிக்கிறார்.

பெண்கள் கூட்டம் மிகுந்திருக்கும் இந்தப்படக்குழுவில் மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சபேஷ் கலைராணி, ஷாலினி விஜயகுமார், சித்தார்தா சங்கர், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன் மற்றும் கிரன் கேஷவ் நடிக்கிறார்கள். சமீபத்ததில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டிருந்தார். அதைத்தற்போது படத்தின் டீசரை நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டுள்ளார்.

‘அச்சம்,மடம், நாணம், பயிர்ப்பு’ படம், பண்பாட்டை பின்பற்றும் ஆச்சாரமிக்க ஒரு குடும்பத்தில் பிறந்த 19 வயது பதின் பருவ பெண், அவளது தற்கால நாகரீக உலகிற்குள்ளும், பண்பாட்டு அடையாளத்திற்குள்ளும் சிக்கி தவிப்பதை கூறும் கதையாகும். ‘ஒரு நல்ல பெண்’ என்பதற்கு சமூகம் விதித்திருக்கும் கட்டளைகள், அவளை எப்படி பாதிக்கிறது என்பதே இக்கதையின் மையம்.
டீசர் குறித்து இயக்குநர் ராஜா ராமமூர்த்தி கூறுகையில், “இந்த டீஸர் பவித்ரா (அக்‌ஷரா ஹாசன்) சந்திக்கும் பல்வேறு பிரச்சனையின் வடிவங்களை காட்டுவதாக இருக்கும். படத்தின் டிரெய்லர் இந்த டீஸரில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்வதாக இருக்கும். இந்த டீஸர் என்பது அடுத்து வரும் டிரெய்லருடைய முன்கதை சுருக்கமே ஆகும். இந்த டீஸரின் முக்கிய குறிக்கோள் பவித்ரா கதாப்பாத்திரத்தின் சூழ்நிலையில், ரசிகர்களை நிறுத்தி வைப்பதே ஆகும்” என்றார்.மேலும் டீசரை வெளியிட்ட நடிகை ஸ்ருதிஹாசனுக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
First published: September 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading