திருமண வீடியோ பதிவிட்ட பிரேம்ஜி - அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள்!
தனது சமூகவலைதள பக்கத்தில் திருமண வீடியோ ஒன்றை பதிவிட்டு ‘கேம் ஓவர்’ என்று தலைப்பிட்டுள்ளார் பிரேம்ஜி.

நடிகர் பிரேம்ஜி
- News18 Tamil
- Last Updated: April 12, 2020, 2:55 PM IST
திருமண வீடியோ ஒன்றை நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி ’கண்டநாள் முதல்’ படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களிலும் நடித்திருந்தார். ’சென்னை 28’ படத்தின் முதல் பாகத்தில் இவரது நகைச்சுவைக் காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் வலம் வரும் பிரேம்ஜி, தற்போது பல படங்களுக்கு இசையமைத்தும் பாடியும் வருகிறார். இந்நிலையில் தனது சமூகவலைதள பக்கத்தில் திருமண வீடியோ ஒன்றை பதிவிட்டு ‘கேம் ஓவர்’ என்று தலைப்பிட்டுள்ளார் பிரேம்ஜி. அதைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் அவருக்கு உண்மையிலேயே திருமணம் முடிந்துவிட்டதா என்ற அதிர்ச்சியுடன் கமெண்ட் பதிவிட்டுள்ளனர். ஆனால் ஒரு சிலரோ விரைவில் நிஜத்தில் திருமணம் நடைபெற பிரார்த்திக்கிறேன் என்று கருத்து பதிவிட்டுள்ளனர். பிரேம்ஜி வெளியிட்டிருக்கும் திருமண வீடியோ அவர் நடித்த படத்தில் எடுக்கப்பட்ட காட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு கேம் ஓவர் டி-சர்ட் அணிந்து பிரேம்ஜி புகைப்படம் பதிவிட்ட போது, திரைத்துறை பிரபலங்கள் பலரும் உண்மை என நம்பி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், அதுபற்றி விளக்கமளித்த பிரேம்ஜி, நான் கடைசி வரை முரட்டு சிங்கிள் தான் என்று கூறியிருந்தார்.
மேலும் படிக்க: புதிய அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர் அட்லீ!
கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி ’கண்டநாள் முதல்’ படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களிலும் நடித்திருந்தார். ’சென்னை 28’ படத்தின் முதல் பாகத்தில் இவரது நகைச்சுவைக் காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் வலம் வரும் பிரேம்ஜி, தற்போது பல படங்களுக்கு இசையமைத்தும் பாடியும் வருகிறார். இந்நிலையில் தனது சமூகவலைதள பக்கத்தில் திருமண வீடியோ ஒன்றை பதிவிட்டு ‘கேம் ஓவர்’ என்று தலைப்பிட்டுள்ளார் பிரேம்ஜி.