விஜய் படங்களை பார்ப்பதுமில்லை... அவருடன் பேச்சுவார்த்தையுமில்லை - நெப்போலியன்

போக்கிரி படத்தில் நடித்த போது தனக்கும் விஜய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக நடிகர் நெப்போலியன் தெரிவித்துள்ளார்.

விஜய் படங்களை பார்ப்பதுமில்லை... அவருடன் பேச்சுவார்த்தையுமில்லை - நெப்போலியன்
நெப்போலியன் | விஜய்
  • Share this:
தமிழ் சினிமாவில் நடிகராகவும், அரசியலில் நுழைந்து சட்டமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தவர் நடிகர் நெப்போலியன். தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் அவர் ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

நெப்போலியன் நடித்திருக்கும் டெவில்ஸ் நைட் என்ற ஹாலிவுட் திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்கில் வெளியாகாமல் அமெரிக்கா மற்றும் கனடாவில் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. மற்ற நாடுகளிலும் படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளது படக்குழு.

இந்நிலையில் படத்தின் விளம்பரத்துக்காக நடிகர் நெப்போலியன் ஜூம் செயலியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நீங்கள் இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்திருக்கிறீர்கள். விஜய்யுடன் போக்கிரி படத்தில் நடித்த நீங்கள், இப்போது அவரது வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.


அதற்கு பதிலளித்த நெப்போலியன், “என்னுடைய நண்பர் பிரபுதேவாவுக்காகத் தான் போக்கிரி படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டேன். அந்தப் படத்தில் விஜய்க்கும் எனக்கும் ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதிலிருந்து அவருடன் நான் பேசுவதுமில்லை. தொடர்ந்து அவருடைய படங்களை பார்ப்பதுமில்லை. அதனால் அவருடைய வளர்ச்சி இப்போது எப்படி இருக்கிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. போக்கிரி படத்தைப் பொறுத்தவரையில் நன்றாக வந்திருந்தது. படம் வெற்றியடைந்தது.

தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ரோலில் தான் விஜய் நடித்தார். நன்றாக நடித்தார். படம் நன்றாக வசூலித்தது. கடின உழைப்பைக் கொடுக்கிறார். அதனால் தானே வளர்ந்து வருகிறார்” என்றார்.

மேலும் படிக்க: நான் மட்டும் தான் குடிச்சேன்... பீட்டர் குடிக்கல - வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட வனிதா விஜயகுமார்சிவகார்த்திகேயனுடன் நடித்த அனுபவம் பற்றி பேசிய நெப்போலியன், “சீமராஜாவில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்திருந்தேன். ஒரு தொகுப்பாளராக இருந்து அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். அது சாதாரண விஷயமல்ல. எனக்கு பிடித்த நடிகர்களில் அவரும் ஒருவர்” என்று கூறினார்.
First published: June 30, 2020, 9:05 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading