சினிமா நடிகை தற்கொலை - யாரையும் நம்ப வேண்டாம் என ரசிகர்களுக்கு அட்வைஸ்

போஜ்புரி நடிகை அனுபமா பதக் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 40.

சினிமா நடிகை தற்கொலை - யாரையும் நம்ப வேண்டாம் என ரசிகர்களுக்கு அட்வைஸ்
நடிகை அனுபமா பதக்
  • Share this:
போஜ்புரி படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமானவர் அனுபமா பதக். பிகார் மாநிலத்தின் புர்னியா மாவட்டத்தைச் சேர்ந்த இவர் மும்பையில் வசித்து வந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி தனது வீட்டில் நடிகை அனுபமா தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு நாள் முன்பு தனது ஃபேஸ்புக் தளத்தில் ரசிகர்களிடம் நேரலையில் பேசியுள்ளார். அப்போது தான் ஏமாற்றப்பட்டதாகவும், யாரையும் நம்பமுடியவில்லை என்றும் அனுபமா தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த லைவ்வில் அனுபமா பேசியதாவது, “உங்கள் நண்பர் மீது நம்பிக்கை வைத்து உங்கள் பிரச்னையைச் சொல்லி தற்கொலை எண்ணத்தில் உள்ளதாகவும் கூறுகிறீர்கள். அவர் எப்படிப்பட்ட நல்ல நண்பராக இருந்தாலும், உங்கள் பிரச்னையிலிருந்து அவர்களை தள்ளி வைக்கச் சொல்வார்கள். அப்போது தான் நீங்கள் இறந்தால் அவர்களுக்கு பிரச்னை வராது.


உங்கள் பிரச்னையை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். யாரையும் நண்பராக நினைக்காதீர்கள். மக்கள் மிகவும் சுயநலத்துடன் இருக்கிறார்கள். இதை என்வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். யாரைப்பற்றியும் அவர்களுக்கு கவலையில்லை” என்று விரக்தியாக கூறியுள்ளார்.

அனுபமாவின் மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கான காரணம் பற்றி அவர் எழுதிய கடிதத்தைக் கைப்பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: August 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading