எஸ்.பி.பி நலம் பெறவேண்டும் - திரை பிரபலங்களின் உருக்கமான பதிவுகள்

Youtube Video

எஸ்.பி.பி. நலம் பெற திரை பிரபலங்கள் பலர் உருக்கமான பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

 • Share this:
  கொரோனா தொற்று காரணமாக கடந்த 5ம் தேதி பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு  மூன்று நாட்களாக மயக்க நிலையில் இருந்த SPB அவர்களின் கண்களில் அசைவு வந்துள்ளது. எனினும், நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  இந்நிலையில், அவர் மீண்டு வர இளையராஜா, ஏ.ஆர். ரகுமான், தினா, நித்யஸ்ரீ உள்ளிட்ட பலர் பிரார்த்தனை செய்தி வெளியிட்டுள்ளனர். இளைய ராஜா வெளியிட்டுள்ள காணொளிக் காட்சியில், ”பாலு சீக்கிரம் எழுந்து வா. உனக்காகக் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

  இதேபோல், எஸ்.பி.பி மீண்டு வர தன்னுடன் சேர்ந்து இசைப் பிரியர்கள் எல்லோரும் பிரார்த்திக்குமாறு ஏ.ஆர். ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
  Published by:Rizwan
  First published: