‘அந்தகாரம்'... அட்லீ எடுக்கும் புதிய படத்தில் ‘மாஸ்டர்’ பட நடிகர்
இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வரும் 14-ம் தேதி தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் அட்லீ
- News18 Tamil
- Last Updated: April 12, 2020, 9:23 PM IST
இயக்குநர் அட்லீ தான் தயாரித்திருக்கும் புதிய படத்தின் டைட்டிலை அறிவித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் பிகில். விஜய், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை அடுத்து ஷாரூக்கான் நடிக்கும் புதிய படத்தை அட்லீ இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுகுறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அவர் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் ஏ ஃபார் ஆப்பிள் என்ற தனது தயாரிப்பு நிறுவனம் அடுத்ததாக தயாரிக்க இருக்கும் புதிய படத்தின் டைட்டிலை அறிவித்துள்ளார் அட்லீ. அந்தகாரம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை விக்னராஜன் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ், கிரீடம் படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்த வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்தை அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இளம் நடிகர்களை வைத்து இயக்குநர் அட்லீ தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வரும் 14-ம் தேதி தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: உண்மைகள் சில நேரம் கசக்கத்தான் செய்யும் - மாஸ்டர் பட பிரபலத்துக்கு ப்ரியா அட்லீ பதில்!
அட்லீ இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் பிகில். விஜய், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை அடுத்து ஷாரூக்கான் நடிக்கும் புதிய படத்தை அட்லீ இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுகுறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அவர் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
இத்திரைப்படத்தை அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இளம் நடிகர்களை வைத்து இயக்குநர் அட்லீ தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வரும் 14-ம் தேதி தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Presenting #ANDHAGHAARAM ,trailer will be out on the 14 th of April ,stay tuned @Atlee_dir @priyaatlee @aforapple_offcl @PassionStudios_ @Sudhans2017 @vvignarajan @iam_arjundas @vinoth_kishan @Poojaram22 @MishMash2611 @pradeepvijay @edwinsakaydop #andhaghaaramfirstlook pic.twitter.com/11F3SIx4d1
— AforApple (@aforapple_offcl) April 12, 2020
மேலும் படிக்க: உண்மைகள் சில நேரம் கசக்கத்தான் செய்யும் - மாஸ்டர் பட பிரபலத்துக்கு ப்ரியா அட்லீ பதில்!