இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்ட் - எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அதிரடி

இயக்குநர் ஷங்கர்

ஷங்கருக்கு எதிரான வழக்கை எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்தலாம் எனவும் கடந்த 2019ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. 

 • Share this:
  எந்திரன் திரைப்பட கதை திருட்டு வழக்கில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆஜராகாத, இயக்குநர் ஷங்கருக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.

  2010-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் திரைப்படம் வெளியானது.  தாம் எழுதிய கதை திருடப்பட்டு, இப்படம் இயக்கப்பட்டதாக எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

  இதையடுத்து இயக்குநர் ஷங்கரும், தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து இருவரும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், இயக்குனர் ஷங்கர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ், வழக்கை நடத்த முகாந்திரம் உள்ளதாகவும்,  ஷங்கருக்கு எதிரான வழக்கை எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்தலாம் எனவும் கடந்த 2019ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.

  இந்நிலையில் இந்த வழக்கில் 10 ஆண்டுகளாக ஆஜராகாத இயக்குநர் ஷங்கருக்கு, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.
  Published by:Vijay R
  First published: