இந்தி படங்களில் நான் பணியாற்றுவதற்கு எதிராக ஒரு கூட்டம் செயல்படுகிறது - ஏ.ஆர்.ரகுமான்

Youtube Video

AR Rahman |

 • Share this:
  இந்தி படங்களில் தான் பணியாற்றுவதற்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுவதாக ஆஸ்கர் வென்ற தமிழரான ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வானொலி நிகழ்ச்சி ஒன்றிற்கு அண்மையில் பேட்டியளித்துள்ளார். அதில் இந்தி படங்களில் தான் பணியாற்றுவதற்கு எதிராக ஒரு கூட்டம் செயல்படுவதாக அவர் கூறியுள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் வெளியாகியுள்ள தில் பேச்சாரோ படத்தின் இயக்குனர் தன்னை சந்தித்த போது, பலரும் ரஹ்மானிடம் செல்ல வேண்டாம் என கூறியதாகவும், சிலர் அவரை தடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

  இப்படித்தான் தனக்கு வரும் நல்ல பட வாய்ப்புகளை பறிக்க ஒரு கும்பல் காத்திருப்பதாகவும் ரஹ்மான் கூறியுள்ளார். 28 ஆண்டுகளாக திரை இசையில் கோலோச்சி வரும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியில் குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே பணியாற்றியுள்ளார். குறிப்பாக ஆஸ்கர் விருது பெற்ற பின்னர் அவர் பணியாற்றிய இந்தி படங்களின் எண்ணிக்கை மிக சொற்பமாகும்.  நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டதற்கு இந்தி திரையுலகில் அவர் புறக்கணிக்கப்பட்டதே காரணம் என்ற கருத்து நிலவி வரும் சூழலில் ரஹ்மானும் இதேபோன்ற புறக்கணிப்புகளுக்கு ஆளாகியுள்ளார் என்ற செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Vijay R
  First published: