ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கி மார்ஃபிங் புகைப்படங்கள் : அனுபமா அப்செட்!
நடிகர் அஜித், வடிவேலு ஆகியோர் தங்களது பெயரில் உருவாக்கப்பட்டிருந்த ட்விட்டர் கணக்கு தங்களுடையது அல்ல, அவை போலியானவை என்று சமீபத்தில் விளக்கமளித்திருந்தனர்.

நடிகை அனுபமா பரமேஸ்வரன்
- News18 Tamil
- Last Updated: April 11, 2020, 4:52 PM IST
தனது ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டு மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டது குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் வாய் திறந்துள்ளார்.
திரைத்துறையில் பெரும்பாலான நடிகர்கள் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகின்றனர். ஒருசிலர் சமூகவலைதளம் பக்கமே தலைவைத்து படுப்பதில்லை. நடிகர் அஜித், வடிவேலு ஆகியோர் தங்களது பெயரில் உருவாக்கப்பட்டிருந்த ட்விட்டர் கணக்கு தங்களுடையது அல்ல, அவை போலியானவை என்று சமீபத்தில் விளக்கமளித்திருந்தனர்.
இதனிடையே கொடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரனின் ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டு, அதில் அவருடைய மார்ஃபிங் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அவர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகாரளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தனது ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் அனுபமா, "இதுபோன்ற செயல்களுக்கு நேரமிருக்கும் அருவருப்பான நபர்களுக்கு உங்கள் வீட்டில் அம்மா, சகோதரி இல்லையா?. இதுபோன்ற முட்டாள்தனத்துக்கு உங்கள் மூளையை பயன்படுத்தாமல் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்துங்கள். இதைத் தெளிவுபடுத்த விரும்பினேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: 2-வது குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் சூட்டிய ராதிகா சரத்குமாரின் மகள்
திரைத்துறையில் பெரும்பாலான நடிகர்கள் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகின்றனர். ஒருசிலர் சமூகவலைதளம் பக்கமே தலைவைத்து படுப்பதில்லை. நடிகர் அஜித், வடிவேலு ஆகியோர் தங்களது பெயரில் உருவாக்கப்பட்டிருந்த ட்விட்டர் கணக்கு தங்களுடையது அல்ல, அவை போலியானவை என்று சமீபத்தில் விளக்கமளித்திருந்தனர்.
இதனிடையே கொடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அனுபமா பரமேஸ்வரனின் ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டு, அதில் அவருடைய மார்ஃபிங் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
மேலும் படிக்க: 2-வது குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் சூட்டிய ராதிகா சரத்குமாரின் மகள்