Spb | இசைப்பள்ளிக்கு எஸ்.பி.பி பெயர் சூட்டி கவுரவித்த ஆந்திர அரசு..
இசை மற்றும் நாட்டிய பள்ளிக்கு மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் பெயரைச் சூட்டி ஆந்திர அரசு கவுரவம் செய்துள்ளது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்
- News18 Tamil
- Last Updated: November 27, 2020, 4:04 PM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒன்றரை மாதத்துக்கு மேலாக அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 24-ஆம் தேதி அவர் உயிரிழந்தார். அவரது மறைவு உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
எஸ்.பி.பி பெயரில் தேசிய விருது வழங்க வேண்டும், தாதே சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும், என திரையுலகினர் பலரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி எஸ்.பி.பிக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில் நெல்லூரை பூர்வீகமாகக் கொண்ட எஸ்.பி.பி.யை கவுரவிக்கும் பொருட்டு நெல்லூரில் உள்ள அரசு இசை மற்றும் நாட்டிய பள்ளி பெயரை டாக்டர் எஸ். பி.பாலசுப்ரமணியம் இசை மற்றும் நாட்டிய பள்ளி என்று பெயர்மாற்றம் செய்ய ஆந்திர மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து ஆந்திராவின் தொழில், வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மிகாபட்டி கவுதம் தனது ட்விட்டர் பதிவில், “எஸ்.பி.பி தன்னிகரில்லா பாடகராக மதிக்கப்பட்டவர். அதனால் நெல்லூரில் இருக்கும் இசை மற்றும் நாட்டிய பள்ளிக்கு அவரது பெயரை வைக்க எங்கள் அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திர அரசின் இந்த அறிவிப்புக்கு எஸ்.பி.பி.சரண் நன்றி தெரிவித்துள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
எஸ்.பி.பி பெயரில் தேசிய விருது வழங்க வேண்டும், தாதே சாகேப் பால்கே விருது வழங்க வேண்டும், என திரையுலகினர் பலரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி எஸ்.பி.பிக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில் நெல்லூரை பூர்வீகமாகக் கொண்ட எஸ்.பி.பி.யை கவுரவிக்கும் பொருட்டு நெல்லூரில் உள்ள அரசு இசை மற்றும் நாட்டிய பள்ளி பெயரை டாக்டர் எஸ். பி.பாலசுப்ரமணியம் இசை மற்றும் நாட்டிய பள்ளி என்று பெயர்மாற்றம் செய்ய ஆந்திர மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.