சித்தார்த் அபிமன்யூ கேரக்டருக்கு அஜித்தைத் தான் யோசித்தோம் - மோகன்ராஜா வெளியிட்ட சீக்ரெட்!

நடிகர் அஜித்
- News18 Tamil
- Last Updated: April 9, 2020, 9:31 PM IST
தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமியின் கேரக்டருக்கு முதலில் நடிகர் அஜித்தைத் தான் மனதில் வைத்திருந்ததாக இயக்குநர் மோகன்ராஜா கூறியுள்ளார்
ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் தனி ஒருவன். இந்தப் படத்தில் அரவிந்த்சாமி ஏற்று நடித்திருந்த சித்தார்த் அபிமன்யூ கதாபாத்திரத்தை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். அதேவேளையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரவிந்த்சாமிக்கு சரியான ரீஎண்ட்ரியாக இந்தப் படம் அமைந்தது.
இந்நிலையில் சித்தார்த் அபிமன்யூ கதாபாத்திரத்தில் நடிகர் அஜித்தை நடிக்க வைக்க நினைத்ததாக இயக்குநர் மோகன்ராஜா தெரிவித்துள்ளார். மேலும் பல நடிகர்களை சித்தார்த் அபிமன்யூ கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அணுகியதாக தெரிவித்துள்ள மோகன்ராஜா, கன்னட நடிகர் சுதீப், நடிகர் ராணா ஆகியோரது பெயர்களும் கதை விவாதத்தின் போது யோசித்ததாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், சித்தார்த் அபிமன்யூ கதாபாத்திரத்தை நடிகர் அஜித் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் நடக்கவில்லை என்றும் மோகன்ராஜா கூறியுள்ளார்.
மேலும் படிக்க: சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சந்திரமுகி 2... சஸ்பென்ஸ் உடைத்த லாரன்ஸ்
ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் தனி ஒருவன். இந்தப் படத்தில் அரவிந்த்சாமி ஏற்று நடித்திருந்த சித்தார்த் அபிமன்யூ கதாபாத்திரத்தை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். அதேவேளையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரவிந்த்சாமிக்கு சரியான ரீஎண்ட்ரியாக இந்தப் படம் அமைந்தது.
இந்நிலையில் சித்தார்த் அபிமன்யூ கதாபாத்திரத்தில் நடிகர் அஜித்தை நடிக்க வைக்க நினைத்ததாக இயக்குநர் மோகன்ராஜா தெரிவித்துள்ளார். மேலும் பல நடிகர்களை சித்தார்த் அபிமன்யூ கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அணுகியதாக தெரிவித்துள்ள மோகன்ராஜா, கன்னட நடிகர் சுதீப், நடிகர் ராணா ஆகியோரது பெயர்களும் கதை விவாதத்தின் போது யோசித்ததாக கூறியுள்ளார்.
மேலும் படிக்க: சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சந்திரமுகி 2... சஸ்பென்ஸ் உடைத்த லாரன்ஸ்