யோகி பாபு எழுதும் கதைக்கு ’ஓகே’ சொல்வாரா நயன்தாரா?
கோமாளி பட ரிலீஸ் சமயத்தில் பேசிய ஜெயம்ரவி, விரைவில் நடிகர் யோகி பாபு இயக்குநர் அவதாரம் எடுப்பார் என்று தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

யோகிபாபு மற்றும் நயன்தாரா
- News18 Tamil
- Last Updated: April 15, 2020, 2:58 PM IST
யோகிபாபு, நயன்தாரா இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2018-ம் ஆண்டு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான படம் கோலமாவு கோகிலா. இத்திரைப்படத்தில் நயன்தாராவைக் காதலிக்கும் நபராக யோகி பாபு நடித்திருபபார். காமெடி, க்ரைம் த்ரில்லர் ஜானரில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்தது.
இத்திரைப்படத்தை அடுத்து ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். நகைச்சுவை நடிகர், ஹீரோ என கலக்கி வந்த யோகி பாபு தற்போது கதை, திரைக்கதை எழுதி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்தில் நாயகியாக நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்தில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்தால் மீண்டும் கோலாமாவு கோகிலா பட ஜோடியை திரையில் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்கும். கோமாளி பட ரிலீஸ் சமயத்தில் பேசிய ஜெயம்ரவி, விரைவில் நடிகர் யோகி பாபு இயக்குநர் அவதாரம் எடுப்பார் என்று தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கொரோனா அறிகுறி: கணவரை மருத்துவமனை அழைத்துச் சென்று திரும்பிய ஸ்ரேயா - நடந்தது என்ன?
கடந்த 2018-ம் ஆண்டு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான படம் கோலமாவு கோகிலா. இத்திரைப்படத்தில் நயன்தாராவைக் காதலிக்கும் நபராக யோகி பாபு நடித்திருபபார். காமெடி, க்ரைம் த்ரில்லர் ஜானரில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்தது.
இத்திரைப்படத்தை அடுத்து ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். நகைச்சுவை நடிகர், ஹீரோ என கலக்கி வந்த யோகி பாபு தற்போது கதை, திரைக்கதை எழுதி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்தில் நாயகியாக நடிகை நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: கொரோனா அறிகுறி: கணவரை மருத்துவமனை அழைத்துச் சென்று திரும்பிய ஸ்ரேயா - நடந்தது என்ன?