சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் (வீடியோ)

Youtube Video

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றி மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

 • Share this:
  சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நடிகை சித்ரா கடந்த டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி பூந்தமல்லிக்கு அருகே உள்ள நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை நசரத்பேட்டை போலீசார் விசாரித்து வந்த நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றி மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

  இந்தநிலையில் நேற்று சிறையில் உள்ள ஹேம்நாத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக ரூ.1.05 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்தனர். பின்னர் ஹேம்நாத்தை, மத்திய குற்றப்பிரிவினர், மோசடி வழக்கில் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து தற்போது விசாரித்து வருகின்றனர். 2 நாள் விசாரணை முடிவில் தான் ஹேம்நாத் எவ்வளவு பணம் மோசடி செய்துள்ளார் என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

  மேலும் படிக்க...45 பேருக்கு TNPSC போலி பணி ஆணை: இரண்டு பேர் கைது

  முன்னதாக சித்ரா தற்கொலை வழக்கை சிசிபிஐடி விசாரிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: