கொரோனா பாதிப்பு : வாழ்வாதாரத்தை இழந்த நடிகர்களுக்கு யோகி பாபு உதவி

நடிகர் யோகி பாபு
- News18 Tamil
- Last Updated: April 9, 2020, 5:19 PM IST
ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கஷ்டத்தில் இருக்கும் நடிகர்களுக்கு நடிகர் யோகி பாபு உதவி செய்துள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தக் கொடிய வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் மருத்துவம், அத்தியாவசிய பணிகளைத் தாண்டி மற்ற பணிகள் எதுவும் நடக்கவில்லை.
திரையுலகில் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டிருப்பதால் சினிமாவை நம்பியிருக்கும் துணை நடிகர்கள், தினக்கூலிக்கு பணியாற்றும் நடிகர்கள், நாடக கலைஞர்கள் ஆகியோர் வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் கஷ்டத்தில் வாடும் நடிகர்களுக்கு உதவுமாறு நடிகர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி ஒருசிலரே நிதியுதவி அளித்ததால் இதுவரை ரூ.15 லட்சம் மட்டுமே வசூலாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் யோகி பாபு வாழ்வாதாரத்தை இழந்து வாடும் நாடக நடிகர்கள் உள்ளிட்டோருக்கு 1,250 கிலோ அரிசி வழங்கியுள்ளார்.
கொரோனா காலத்திலும் இந்த உதவியை அவரே களத்தில் இறங்கி வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மாஸ்டர் எப்போது ரிலீஸ்... வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு படக்குழு கொடுத்த ஆறுதல் அப்டேட்!
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தக் கொடிய வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் மருத்துவம், அத்தியாவசிய பணிகளைத் தாண்டி மற்ற பணிகள் எதுவும் நடக்கவில்லை.
திரையுலகில் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டிருப்பதால் சினிமாவை நம்பியிருக்கும் துணை நடிகர்கள், தினக்கூலிக்கு பணியாற்றும் நடிகர்கள், நாடக கலைஞர்கள் ஆகியோர் வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்படும் நிலை உருவாகியுள்ளது.
கொரோனா காலத்திலும் இந்த உதவியை அவரே களத்தில் இறங்கி வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மாஸ்டர் எப்போது ரிலீஸ்... வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு படக்குழு கொடுத்த ஆறுதல் அப்டேட்!