வடிவேல் பாலாஜியின் உடல் நல்லடக்கம் - ரசிகர்கள், சின்னத்திரை பிரபலங்கள் கண்ணீர் மல்க அஞ்சலி - வீடியோ

Youtube Video

நடிகர் வடிவேல் பாலாஜியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு சின்னத்திரை நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

 • Share this:
  விஜய் டிவியின் அது இது எது, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நகைச்சுவை நிகழ்ச்சிகளின் மூலம் மக்களை மகிழ்வித்து பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. 42 வயதாகும் இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினார்.

  மீண்டும் மயக்கம் ஏற்பட ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வடிவேல் பாலாஜிக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

  வடிவேல் பாலாஜியின் உடல் சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவருடன் பணியாற்றிய சின்னத்திரை சகாக்கள் ராமர், ரோபோ சங்கர், மணிமேகலை, சிரிச்சா போச்சு குழுவினர் உள்ளிட்ட பலர் நேரில் வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். அதேபோல் நடிகர் விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் நேரில் வந்து வடிவேல் பாலாஜிக்கு இறுதி மரியாதை செய்தனர். நடிகர் சிவகார்த்திகேயன் வடிவேல் பாலாஜியின் இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக குடும்பத்தாரிடம் நம்பிக்கை வார்த்தை கூறியுள்ளார்.  சேத்துப்பட்டில் உள்ள வடிவேல் பாலாஜியின் இல்லத்தில் இருந்து 2.30 மணி அளவில் அவரது உடல் நல்லடக்கத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சிரிச்சா போச்சு குழுவினரும், ரசிகர்கள் ஏராளமானோரும் வாகனத்தைப் பின் தொடர்ந்து வந்தனர். நுங்கம்பாக்கம் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல் கிறிஸ்தவ முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.
  Published by:Sheik Hanifah
  First published: