சினிமா தொழிலாளர்களுக்கு 100 அரிசி மூட்டைகள் வழங்கிய நடிகர் சூரி..!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நடிகர் சூரி
- News18 Tamil
- Last Updated: April 11, 2020, 1:56 PM IST
சீனாவின் ஊஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் தன் தடத்தை பதித்து வருகிறது.
இந்தக் கொடிய வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை உலகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 7447 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 642 பேர் குணமடைந்துள்ளனர். 239 பேர் மரணமடைந்துள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பெஃப்சி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருவதைச் சுட்டிக்காட்டி, அவர்களுக்கு உதவ நடிகர்கள், தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும் என்று அச்சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து திரைத்துறையினர் பலரும் நிதியாகவும், அரிசி மூட்டைகளாகவும் கொடுத்து உதவி செய்தனர். ஆனாலும் இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை என்று செல்வமணி மீண்டும் உதவி கோரினார். இந்நிலையில் நடிகர் சூரி பெஃப்சி தொழிலாளர்களுக்கு 25 கிலோ கொண்ட 100 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார். இதுதவிர துணைநடிகர்கள் சங்கத்துக்கு 20 அரிசி மூட்டைகளையும் வழங்கியுள்ளார்.
மேலும் படிக்க: சென்னை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவருக்கு கொரோனா தொற்று - குடும்பத்தினர் உள்பட தொடர்பில் இருந்த 100 பேருக்கு பரிசோதனை
இந்தக் கொடிய வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை உலகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 7447 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 642 பேர் குணமடைந்துள்ளனர். 239 பேர் மரணமடைந்துள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பெஃப்சி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருவதைச் சுட்டிக்காட்டி, அவர்களுக்கு உதவ நடிகர்கள், தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும் என்று அச்சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து திரைத்துறையினர் பலரும் நிதியாகவும், அரிசி மூட்டைகளாகவும் கொடுத்து உதவி செய்தனர். ஆனாலும் இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை என்று செல்வமணி மீண்டும் உதவி கோரினார்.
மேலும் படிக்க: சென்னை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவருக்கு கொரோனா தொற்று - குடும்பத்தினர் உள்பட தொடர்பில் இருந்த 100 பேருக்கு பரிசோதனை