”நான் கவுண்டமணி”.. டைம் ட்ராவல் செய்து ‘டிக்கிலோனா’ ஆடும் சந்தானம்... அசத்தும் ட்ரெயிலர் காட்சிகள்..

Youtube Video

சந்தானம் நடித்துள்ள ‘டிக்கிலோனா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

 • Share this:
  சந்தானம் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் "டிக்கிலோனா". கார்த்திக் யோகி இயக்கும் இந்தப் படத்தை பலூன் பட இயக்குநர் சினிஷ் தயாரிக்க கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

  இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கிறார் . மேலும் ஆனந்தராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, அனகா, ஷிரின் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைத்திருக்கிறார்.

  ஏற்கெனவே இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு. அதில் டைம் மிஷினில் டிராவல் செய்து தனக்கு நடந்த திருமணத்தை நிறுத்தப் போகிறார் சந்தானம். மேலும் மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு உள்ளிட்டோரிடம் சந்தானம் பேசும் நகைச்சுவையான கவுண்டர் வசனங்களும் இடம்பெற்றுள்ளன. ட்ரெய்லரின் கடைசியில் மூன்று சந்தானம் கதாபாத்திரங்களும் ஓருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள அதில் ஒரு கேரக்டர் தன்னை கவுண்டமணி என்று கூறுகிறது.  ட்ரெய்லரின் ஒவ்வொரு காட்சியிலும் சந்தானத்தின் காமெடியான பஞ்ச் வசனங்கள் இடம்பெற்றிருப்பதால் ‘டிக்கிலோனா’ படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
  Published by:Sheik Hanifah
  First published: