நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு எப்போது?

ஊரடங்கு தளர்விற்கு பின்னர் பள்ளிகளை எப்போது திறப்பது மற்றும் ஆன்லைன் வழியில் கல்வி கற்பிப்பதற்கான வழிகாட்டு முறைகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு எப்போது?
கோப்புப் படம்
  • Share this:
ஊரடங்கு தளர்வை தொடர்ந்து நாடு முழுவதும் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், பள்ளிகள் திறப்பிற்கு பிறகு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக அனைத்து மாநில பள்ளி கல்வி செயலாளர்களுடன் மத்திய கல்வித்துறை செயலாளர் அனிதா கர்வால் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை பேணுவது தொடர்பாகவும், ஆன்லைன் வாயிலாக கல்வி கற்பிப்பதில் உள்ள பிரச்னைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளிட்டுள்ள டிவிட்டர் பதிவில் மாநில அரசுகளிடம் இருந்து ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பிற்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க...

ரத்தை நோக்கிச் செல்லும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு? அரசு ஆலோசிப்பது என்னென்ன?

 

First published: June 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading