கேரளாவில் தனிநபர் இடைவெளியுடன் நடத்தப்பட்ட 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு

மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அந்த அறைகள் முழுமையாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.

கேரளாவில் தனிநபர் இடைவெளியுடன் நடத்தப்பட்ட 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு
மாணவர்கள் உடல்வெப்பநிலை பரிசோதித்த போது
  • Share this:
கேரளாவில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கி நடைபெற்றது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் தேர்வை எதிர்கொண்டனர்.

அடுத்த 5 நாட்களுக்கு தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் உடல்வெப்பநிலை பரிசோதித்த பின்னரே தேர்வு அறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மாணவர்களுக்கு முகக்கவசங்கள், தனிமனித இடைவெளி ஆகியவை கடைபிடிக்கப்பட்டன. மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த உடன் அந்த அறைகள் முழுமையாக கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.


3,000 மையங்களில் தேர்வு நடைபெற்றது. ஆசிரியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வுக்கு முன்பும் பின்னரும் அவர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டனர்.


Also see...
First published: May 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading