கால அவகாசம் நிறைவு - அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்க வாய்ப்பு இல்லை

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை ஏற்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.

கால அவகாசம் நிறைவு - அண்ணா பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்க வாய்ப்பு இல்லை
அண்ணா பல்கலைக்கழகம்.
  • Share this:
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு  முடிவு செய்து கடந்த ஆண்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டது. இதனையடுத்து 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது, குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சீர்மிகு அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் என இரண்டாக பிரிக்க முடிவு செய்து அரசாணையை பிறப்பித்தது.

மேலும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை தொடர்ந்து பின்பற்றுவது தொடர்பாக தமிழக அரசு சார்பில்  மத்திய அரசிடம் விளக்கம் கோரப்பட்டது. ஆனால் இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசின் தரப்பிலிருந்து தமிழக அரசுக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்று உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனால் சிறப்பு அந்தஸ்தை ஏற்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சிறப்பு அந்தஸ்த்து விவகாரம் தொடர்பாக இந்த மாத துவக்கத்தில் மத்திய அரசு தரப்பில் இருந்து  கடிதமொன்று அனுப்பப்பட்டது.


அதில் சிறப்பு அந்தஸ்தை ஏற்பது தொடர்பாக மே 31-ம் தேதிக்குள்  தமிழக அரசு முடிவினை தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மத்திய அரசின் கடிதம் தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், உயர் கல்வித் துறை அதிகாரிகள், தமிழக முதலமைச்சருடன் கடந்த மாதம் 20-ம் தேதி ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடு முறைக்கு பாதிப்பில்லாமல் செயல்படுத்துவது தொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் & அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசனைகள் மேற்கொண்டு முடிவுகளை தமிழக அரசிடம்  வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் மத்திய அரசு வழங்கிய அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அரசு தரப்பில்  எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு வழங்க முடிவு செய்த, சிறப்பு அந்தஸ்த்து நாட்டில் உள்ள வேறொரு பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.Also read... தமிழகத்தில் 2 மாதங்களுக்கு பின் பேருந்து சேவை தொடக்கம் - முககவசம் அணியாதவர்களுக்கு அனுமதி இல்லை

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு - சமீபத்திய விலை நிலவரம் என்ன?

பிரதமர் மோடி படத்துடன் போஸ்டர் - மதுரையில் 4 பேர் கைது


நடிகர்கள் மனோபாலா, சிங்கமுத்து மீது வடிவேலு பரபரப்பு புகார்

சூடான பைக் மீது தெளிக்கப்பட்ட சானிடைசரால் நடந்த விபரீதம் - வீடியோ

சினிமா நடிகர்கள் & நடிகைகள் புகைப்படங்கள்


Also see...
First published: June 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading