12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு... ரிசல்ட் எப்போது?

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நிறவடைந்துள்ளது.

12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு... ரிசல்ட் எப்போது?
மாதிரி படம்
  • Share this:
12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 24 ஆம் தேதி முடிவடைந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் தேர்வின் இறுதி நாளில் 34 ஆயிரம் பேர் தேர்வு எழுத முடியாமல் போனது.

இந்நிலையில் ஏற்கனவே முடிந்த தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தும் பணி மே 27 ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. வழக்கமாக விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்த 10 நாட்களில் முடிவுகள் வெளியாகும்.ஆனால் இந்த ஆண்டு தேர்வு இறுதி நாளில் தேர்வெழுத முடியாது போனவர்ககுக்கு மறு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து தேர்வுத்துறை விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read... இறுதியாண்டு மாணவர்களைத்தவிர மற்ற அனைவருக்கும் தேர்ச்சி- சட்டக்கல்லூரிகளுக்கு பார் கவுன்சில் அறிவுறுத்தல்

First published: June 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading