10-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து - அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - தெலங்கானா அரசு அதிரடி

பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தெலங்கானா அரசு அறிவித்துள்ளது.

10-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து - அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - தெலங்கானா அரசு அதிரடி
(கோப்புப் படம்)
  • Share this:
இந்தியாவில் கொரோனா பரவல் தொங்கியநிலையில், மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதற்கு முன்னதாக சில தினங்களுக்கு முன்னரே நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. அதனால், அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் நடத்த இயலவில்லை. அதனால், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று மாநில அரசுகள் அறிவித்தன.

இருப்பினும், 10 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பதால் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துவருகின்றன. அந்த கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத தமிழக அரசு, ‘ஜூன் 15-ம் தேதி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ‘கொரோனா வைரஸ் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லை. எனவே, இன்டர்நேல் மதிப்பெண்களின் அடிப்படையில், 10-ம் வகுப்பு மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவார்கள்’ என்று அறிவித்துள்ளார்.


Also see:

 
First published: June 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading