ரத்தை நோக்கிச் செல்லும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு? அரசு ஆலோசிப்பது என்னென்ன?

SSLC Public Exam | பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக தமிழக முதல்வர் இன்று விரிவான ஆலோசனை நடத்த உள்ளார்

ரத்தை நோக்கிச் செல்லும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு? அரசு ஆலோசிப்பது என்னென்ன?
(கோப்புப் படம்)
  • Share this:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15-ம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கை நேற்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

பொதுத்தேர்வை உடனடியாக நடத்த வேண்டிய தேவை என்ன என்று தொடர்ந்து நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற அழுத்தம் எழுந்துள்ள காரணத்தால், தேர்வை ரத்து  செய்யும் முடிவை அரசு பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேர்வை திட்டமிட்டபடி தொடர்ந்து நடத்தினால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுவதுடன் ஏதேனும் ஒன்றிரண்டு மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் அல்லது மாணவர்களில் யாரேனும் கொரோனாவால் உயிரிழக்க நேரிட்டாலும் அரசுக்கு அது மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தேர்வை ரத்து செய்துவிட்டு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அனைவரையும் தேர்ச்சி அடையச் செய்ய பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.


தற்போதைய நிலையில் ஜூன் 15-ம் தேதி தேர்வை நடத்துவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே தமிழக அரசுக்கு உள்ளது. தேர்வை நடத்துவதாக இருந்தாலும் ஜூலை இரண்டாவது வாரத்தில்தான் நடத்த வேண்டிய சூழல் உள்ளது.

தற்போதைய நிலையைக் காட்டிலும் கொரோனா பாதிப்பு வருகின்ற நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தமிழக அரசே ஒத்துக் கொண்டுள்ளது. தேர்வை இத்தனை அழுத்தங்களுக்கு மத்தியில் வரும் நாட்களில் நடத்தினால் அது அரசுக்கு தேவையில்லாத அவப்பெயர் ஏற்படக்கூடும்.

இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடன் ஆலோசனை நடத்துகிறார். இதில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. இதனை அடுத்து முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.மேலும் படிக்க...

உலகளவில் 72 லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு

 

First published: June 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading