பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு தேர்வு ஒத்திவைப்பு

பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு தேர்வு  கொரோனா முன்னெச்சரிக்கை சூழ்நிலையால் ஒத்திவைக்கப்படுவதாக  அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு தேர்வு ஒத்திவைப்பு
அண்ணா பல்கலைக்கழகம்.
  • Share this:
பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு தேர்வு  கொரோனா முன்னெச்சரிக்கை சூழ்நிலையால் ஒத்திவைக்கப்படுவதாக  அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2001-2002 ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்து. பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு கடந்த 2019 நவம்பர்,டிசம்பர் மற்றும் 2020 ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக் கழக தேர்வுக்கட்டுப்பாட்டு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தற்பொழுது நிலவி வரும் கொரோனா பாதிப்பு  சூழ்நிலையால் மாணவர்களுக்கு ஏற்கனவே 2020 ஏப்ரல் மற்றும் மே மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட சிறப்புத் தேர்வுக்கு விதிமுறைகளின் படி போதுமான அளவில் வகுப்புகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,  எனவே அவர்களுக்கு வகுப்புகள் நடைபெறுவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெறும் தேதி தேர்வுக்கு  முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்றும்  ஏற்கனவே சிறப்பு தேர்வுக்கான கட்டணம் செலுத்திய மாணவரக்ள் மீண்டும் செலுத்த தேவையில்லை.மாணவர்களுக்கான தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read... திமுக எம்எல்ஏ அன்பழகன் உடல்நிலை குறித்து தொலைபேசியில் விசாரித்தார் முதலமைச்சர் பழனிசாமிAlso see...
First published: June 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading