பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை - அமைச்சர் செங்கோட்டையன்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை - அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்
  • Share this:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

காலை 10:30 மணிக்கு தொடங்கும் தேர்வுக்கு மாணவர்கள் 9.45க்கே வர வேண்டும் எனவும், மாணவர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகே தேர்வு அறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் 2 முகக்கவசங்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், காய்ச்சல் அதிகமுள்ள மாணவர்களுக்கு தேர்வில் விலக்கு அளிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


Also read... சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணிக்க 5 அமைச்சர்கள்

Also see...
First published: June 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading