புதிய பாடத் தொகுப்புக்கு அனுமதி பெற்ற பிறகே மாணவர் சேர்க்கையை தொடங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடத் தொகுப்பிற்கு அனுமதி பெறாமல் பள்ளிகள் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

புதிய பாடத் தொகுப்புக்கு அனுமதி பெற்ற பிறகே மாணவர் சேர்க்கையை தொடங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
கோப்பு படம்
  • Share this:
கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளன. இதற்கிடையில், மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டில் வரும் கல்வியாண்டில் ஆறு பாடங்களுக்கு 600 மதிப்பெண்களுக்குப் பதில் ஐந்து பாடங்கள் என்று 500 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என்று அரசு அறிவித்தது.

அதற்கேற்ப மாணவர்கள் தாங்கள் விரும்பும் 5 பாடங்களை விருப்பம்போல் தேர்வு செய்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி மாணவர்கள் ஆங்கிலம், தமிழ், கணிதம், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களையும் கணிதம் தவிர்த்து ஆங்கிலம், தமிழ், உயிர் அறிவியல், வேதியியல் இயற்பியல் ஆகிய பாடங்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

தற்போது கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் அரசு அறிவித்துள்ள புதிய பாடத்தொகுப்பிற்கு தனியார் பள்ளிகள் அனுமதி வாங்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அதனை மீறி மே மற்றும் ஜூன் மாதங்களில் மாணவர் சேர்க்கையினை நடத்திவிட்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் புதிய படத்தொகுப்பிற்கு அனுமதி கேட்ககூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி தனியார் பள்ளிகள் வரும் கல்வியாண்டு முதல் அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய பாடத்தொகுப்பிற்கு அனுமதி பெற்ற பிறகே பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
First published: June 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading