ஆன்லைன் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு : அண்ணா பல்கலைக்கழகம்

தொழில்நுட்பக் குறைபாடு காரணமாக ஆன்லைன் தேர்வைத் தவறவிட்ட மாணவர்களுக்கு, மீண்டும் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு குறித்து அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு : அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்.
  • News18 Tamil
  • Last Updated: September 26, 2020, 1:43 PM IST
  • Share this:
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் முறையாக மாணவர்கள் ஆன்லைனில் தேர்வை சந்திப்பதால், அதற்கு முன்னோட்டமாக மாதிரி தேர்வு கடந்த 19, 20 மற்றும் 21-ந்தேதிகளில் நடத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 22-தேதி ‘பிராஜெக்ட்’ மற்றும் நேர்காணல் தேர்வு நடைபெற்றது. தேர்வில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் பல்வேறு கட்ட அறிவிப்புகளை வெளியிட்டது.

பின்னர் இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதிப்பருவத் தேர்வு, செப்டம்பர் 24ம் தொடங்கி 29ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெறுகிறது. ஒரு லட்சத்து 41 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்தனர். இந்தநிலையில் வியாழன் அன்று தொடங்கிய தேர்வில், 90 விழுக்காடு மாணவர்கள் எவ்வித தொழில்நுட்பத் தடையுமின்றி தேர்வு எழுதினர். எனினும் மொபைல் மற்றும் இணையதள சிக்னல் கோளாறு காரணமாக, 10 சதவீத மாணவர்கள் தேர்வு எழுதமுடியாமல் போனது.

மேலும் படிக்க...3 கட்டத் தேர்தல்: வாக்காளர்களுக்கு கையுறை: கூடுதல் வாக்குப் பதிவு நேரம் - பீகார் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு


அவர்களுக்கு பின்னர் தேர்வு நடத்துவது குறித்து வாய்ப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் இனிவரும் தேர்வுகளிலும் எந்த சிக்கலும் இல்லாத வகையில் தேர்வை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
First published: September 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading