ஆன்லைன் வகுப்பு: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை

தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணம் கூறி, ஆன்லைன் வகுப்புகளில் இருந்து மாணவர்களை நீக்கினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

ஆன்லைன் வகுப்பு: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை
மாதிரிப் படம்
  • Share this:
ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 159 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை , இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை  அமைச்சர்கள் செங்கோட்டையன் , கருப்பணன் ஆகியோர் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா பாதிப்புள்ள மாணவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக கூறினார்.

கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் இடங்களில் வசிக்கும் மாணவர்களை வேன் மூலமாக அழைத்து வந்து தனி அறையில் தேர்வெழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.


மேலும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணம் கூறி, ஆன்லைன் வகுப்புகளில் இருந்து மாணவர்களை நீக்கினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க...

ஆரணியில் பைக்கில் சென்றவர்கள் மீது மிளகாய் பொடி துாவி கத்தியால் குத்தியவர்களுக்கு வலைவீச்சு 

First published: June 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading