ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன? : தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் எச்சரிக்கைப் பட்டியல்

ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்கள் பாதிக்கக்கூடிய சூழல் இருப்பதாக தேசிய கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் NCERT எச்சரித்துள்ளது.

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன? : தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் எச்சரிக்கைப் பட்டியல்
மாதிரி படம்
  • Share this:
ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்கள் பாதிக்கக்கூடிய சூழல் இருப்பதாக தேசிய கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் NCERT எச்சரித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு  வகுப்புகள் நடத்தப்படும் சூழலில்  அதிக நேரம் மாணவர்கள் செல்போன், கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை, பயன்படுத்துவதாகவும் இந்த சூழலில் மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக அச்சுறுத்தலுக்கு ஆளாகும் சூழல் நிலவுவதாகவும்  சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநலம் பாதிப்பதுடன்  இதனால்  மாணவர்களின்  கல்வி பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் பதின்ம வயதில் உள்ள  மாணவர்களின் உணர்வுகள் தூண்டப்பட்டு அவர்கள் தவறான பாதைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Cyber bullying என்றால் என்ன..?

➤ வன்முறையை தூண்டக்கூடிய வீடியோக்கள், புகைப்படங்களை  பதிவிடுவது.

➤ குறிப்பிட்ட கலாச்சாரம் மற்றும்  பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களை தாழ்த்துவது.➤ பொய்யான தகவல்களை பரப்புவது.

➤ ஒருவரின் ஆன்லைன் கணக்கு பாஸ்வேர்டு ஆகியவற்றை திருடி அவர்களின் கணக்கில் இருந்து தேவையற்ற ,பொய்யான செய்திகளை அனுப்புவது.

➤ ஆபாச புகைப்படங்கள் ,வீடியோக்கள் பதிவிடுவது மற்றும் பிறரை பார்க்கத்தூண்டுவது  ஆகியவை சைபர் புல்லிங் குற்றத்தின் கீழ் வரும்.

எனவே மாணவர்கள் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தும்போது கடைபிடிக்க வேண்டிய மற்றும் செய்யக்கூடாத அம்சங்களை NCERT பட்டியலிட்டுள்ளது

மாணவர்கள் செய்ய வேண்டியவை...

தங்களுடைய ஆன்லைன்  கணக்கு மற்றும் பாஸ்வேர்டு பிறர் அறியமுடியாத வகையில் வலிமையானதாக இருக்க வேண்டும்
ஆன்லைனில் தெரிந்த நபர்களுடன் மட்டுமே தொடர்பில் இருக்க வேண்டும்.

மாணவர்கள் தங்களுடைய ஆன்லைன் கணக்கு பிறரால்  முடக்கப்பட்டது தெரிந்தலோ ஆன்லைன் அச்சுறுதலுக்கு ஆட்பட்டாலோ அதுகுறித்து   சைபர் புல்லிங் குற்றங்களை தடுக்கும் 112 என்கிற காவல்  உதவி எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவிக்க வேண்டும்.

மாணவர்கள் செய்யக்கூடாதவை...

பாஸ்வேர்டு உள்ளிட்ட விவரங்களை பிறரிடத்தில் பகிரக்கூடாது.
ஆன்லைனில் தங்கள் வயது, முகவரி, தொலைபேசி எண், பள்ளியின் பெயர் ஆகியவற்றை தெரிவிக்கக்கூடாது

வன்முறையை தூண்டக்கூடிய வகையிலும், மற்றவர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் பதிவுகளையும் பதிவேற்றக்கூடாது

தொந்தரவுகள் இருப்பின் மாணவர்கள் புகார் தெரிவிக்க வேண்டிய எண் மற்றும் முகவரியினை NCERT வெளியிட்டுள்ளது.

112 காவல் உதவி எண்.

குழந்தைகள் உதவி எண் 1098

டிவிட்டரில் @CYBERDOST ஆகியவற்றில் புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

Also read... இந்திய வானிலை ஆய்வு மையத்தை பாராட்டிய உலக வானிலை ஆய்வு மையம்... எதற்கு தெரியுமா?Also see...
First published: June 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading