எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்காது - புதிய கல்விக்கொள்கை குறித்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தமிழில் கருத்து

எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்காது என புதிய கல்விக் கொள்கை குறித்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

எந்த மொழியையும் மத்திய அரசு திணிக்காது - புதிய கல்விக்கொள்கை குறித்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தமிழில் கருத்து
மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.
  • Share this:
மத்திய அரசு எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை பிரதானமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் இதுவரை பின்பற்றப்பட்டு வருகிறது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மறைமுக மொழி திணிப்பைச் செய்து வருவதாக தமிழகத்தில் பரவலாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதிவிட்ட புதிய கல்விக் கொள்கை குறித்த ட்விட்டர் பதிவைச் சுட்டிக்காட்டியுள்ள ரமேஷ் பொக்ரியால், மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்காது என்று விளக்கம் அளித்துள்ளார்.
First published: August 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading