மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீட்டில் முறைகேடு? சுகாதார அமைச்சகம் பதிலளிக்க ஓ.பி.சி ஆணையம் உத்தரவு

மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி. வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படாதது குறித்து விளக்கமளிக்க சுகாதாரத்துறைக்கு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீட்டில் முறைகேடு? சுகாதார அமைச்சகம் பதிலளிக்க ஓ.பி.சி ஆணையம் உத்தரவு
கோப்பு படம்
  • News18
  • Last Updated: May 27, 2020, 7:21 PM IST
  • Share this:
இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கையில் மத்திய தொகுப்பிற்கு 15 சதவிகித இடங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல, அரசியலமைப்பு சட்டம் 15-ன் உட்பிரிவு 5-ன்படி, கல்வி இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு மத்திய பொதுத் தொகுப்பில் இருந்து வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், நீட் தேர்வு வந்த பிறகு மருத்துவப் படிப்பில் மத்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றவில்லை என திமுக கூட்டணி எம்.பி.க்கள் பலமுறை நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகின்றனர்.

இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாத காரணத்தால் கடந்த 3 ஆண்டுகளாக ஓ,பி.சி பிரிவினருக்கு கிடைத்திருக்க வேண்டிய சுமார் 10 ஆயிரம் இடங்கள் பொதுப்பிரிவினருக்கு சென்றுவிட்டதாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் ஓபிசி ஊழியர்கள் கூட்டமைப்பு புகார் அளித்துள்ளது.


2020ஆம் கல்வியாண்டில் 1,758 முதுகலை மருத்துவ இடங்களில் மத்திய தொகுப்பிற்கு 879 இடங்கள் வழங்கப்பட்டன எனவும் அந்த இடங்கள் தமிழகம் வசம் இருந்திருந்தால் அவற்றில் 440 இடங்கள் ஓபிசி பிரிவினருக்கு கிடைத்திருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படாதது குறித்து 15 நாட்களில் விளக்கமளிக்க மத்திய சுகாதாரத்துறைக்கு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, மருத்துவ கல்விக்கான மத்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்காதது சமூக நீதிக்கு எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லை என சொல்லும் மத்திய அரசு, சமூகத்தகுதியால் முன்னேறிய வகுப்பினருக்கு மட்டும் 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்குகிறது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஓபிசி பிரிவினருக்கு மத்திய தொகுப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதற்கு மாநில அரசுகள் அழுத்த தர வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: May 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading